பிரபல நடிகருக்கு வில்லனாகும் பிரேம்ஜி.! அதிர்ச்சியில் கோலிவுட்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயனின் 20 வது படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது. இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் ஆசிரியர் வேடத்தில் நடிக்க இருக்கிறார். என்று கூறப்படுகிறது. 

இதில் ஹீரோயினாக சாய்பல்லவி, சத்யராஜ் மற்றும் இங்கிலாந்து நடிகை மரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளது. 

தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இத்தகைய நிலையில் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட்பிரபுவின் அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர் பிரேம்ஜி. 

ஏற்கனவே, ஒருமுறை கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்து அது படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 20 ஆவது படத்தில் வில்லனாக பிரேம்ஜி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premji in villain role


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->