இயேசுவாக 40 கதை புகழ் அஸ்வின்... செம்பி படத்தில் மத பிரச்சாரமா..? மன்னிப்பு கேட்ட இயக்குனர்..!! - Seithipunal
Seithipunal


ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியீட்டில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய செம்பி திரைப்படத்தில் 40 கதை கேட்டு தூங்கிய நடிகர் அஸ்வின் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் கோவை சரளா மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார். செம்பி திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில் நேற்று சிறப்பு காட்சி பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களுக்காக சென்னையில் திரையிடப்பட்டது. 

செம்பி திரைப்படத்தின் இறுதி காட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயேசு உதவுவது போல நடிகர் அஸ்வின் சித்தரித்து காட்டியதாக கூறப்படுகிறது.

படம் முடிந்த பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் படம் பார்த்த ஒருவர் "நல்ல படம் எடுத்திருக்கிறீர்கள்? ஏன் இறுதியில் இதுபோல மதப் பிரச்சாரம் செய்கிறீர்கள்" என அனைவரும் முன்னிலையில் கேட்டதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அதற்கு பதில் அளித்த செம்பி திரைப்படத்தின் இயக்குனர் "கிறிஸ்தவம் மதமே இல்லை. இயேசு மதப் பிரச்சாரம் செய்யவும் இங்கு வரவில்லை. அவர் அன்பை நிலை நாட்டவே வந்தார்"என மதப் பிரச்சாரம் செய்யும் வகையில் செய்தியாளர்கள் மத்தியில் பதிலளித்தார்.

இதனால் கடுப்பான கேள்வி கேட்ட நபர் "எல்லா மதங்களும் அன்பைத்தான் வலியுறுத்துகிறது. பகவத் கீதையிலும் இது சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்க மற்ற மதங்களையும் சுட்டிக்காட்டலாமே" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த இயக்குனர் பிரபு சாலமன் "மற்றவர்கள் செய்வதை நான் எங்கும் சுட்டிக்காட்டுவதுமில்லை. அதைப்பற்றி பேசுவதும் இல்லை. அது அவர்களின் விருப்பம்" என பதில் அளித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து இயக்குனர் பிரபு சாலமன் யாருடைய மனதையாவது கஷ்டப்படுத்தி இருந்தால் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அனைவரும் முன்னணியில் பேசினார்.

இதனை அடுத்து செய்தியாளர்களில் மற்றொரு தரப்பினர் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று தெரிவித்து வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prabhu Salomon apologize for arguing with reporters on christianity


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->