பாகுபலி நடிகர் பிரபாஸுக்கா இந்த நிலை.? மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு.?!  - Seithipunal
Seithipunal


பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் உடல் நலக்குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தெலுங்கில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடையே முன்னணி நடிகராக பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். இந்த நிலையில் தற்போது இவர் கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்திலும், நாக் அஸ்வின் இயக்கத்தில் 'ப்ராஜெக்ட் கே' என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் பிரபாஸுக்கு உடல் நலக்குறைவு காரணமாக சலாம் படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல் கடந்த பிப்ரவரி மாதமும் உடல்நல குறைவு காரணமாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. 

தொடர்ந்து ஓய்வில்லாமல் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருவதால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prabhas admitted in hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->