ரசிகர்களே ரெடியா..  நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 முன்பதிவு தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகியது.

பெரும், எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இது வசூல் ரீதியாக பயங்கரமாக வெற்றி பெற்றது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கு மேல் பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28 திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகளை படக்குழு தீவிரமாக செய்து வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது. 

அந்த வகையில் இந்த படத்திற்கான டிக்கெட்டை, புக் மை ஷோ, டிக்கெட் நியூ, ஆப்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniyin Selvan 2 movie online booking open


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->