அட... நம்ம நாடோடிகள் புகழ் அனன்யாவா இது.? வைரலான அவரது குடும்ப புகைப்படம்.! - Seithipunal
Seithipunal



தமிழ் சினிமாவில் நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அனன்யா. கேரளாவைச் சார்ந்த இவரது இயற்பெயர் ஆயில்யா நாயர். 2008 ஆம் ஆண்டு வெளியான பாசிடிவ் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் இவர்.

2009 ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அந்த சிறந்த நடிப்பிற்காக விஜய் டிவியின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார் இவர். அதனைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும், புலிவால், சீடன் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என  தென்னிந்திய சினிமாவில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பெற்றவர். இவர் ஆஞ்சநேயரன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தாலும் தனது நடிப்பை கைவிடாமல்  திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பவர்.

சமீபத்தில் இவரது திருமணம் மற்றும் கணவரின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலானது. அனன்யாவின் கணவரா இது.? என ரசிகர்கள்  ஆச்சரியத்துடன் அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pictures of nadodigal fame Ananya with her husband have gone viral on the internet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->