நடிகர் சந்தானம் படத்தின் 'பேர் வச்சாலும்' பாடல் புதிய சாதனை.!! - Seithipunal
Seithipunal


நடிகர் சந்தானம் நடிப்பில் ஜீ தமிழ் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானத்திற்கு நாயகியாக அனகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், முனீஷ் காந்த், மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரும் நடித்து உள்ளனர். 

இந்த படத்தை கே.ஜெ.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்தது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கினார்.

இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது தந்தை இளையராஜா இசை அமைத்த இருந்த 'பேர் வச்சாலும்' என்ற பாடலை ரீமேக் செய்து தனது ஸ்டைலில் உருவாக்கியிருந்தார். இந்தப் பாடலானது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான சமயத்தில் இந்தப் பாடலானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. 

இந்நிலையில், பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம் என்ற பாடலானது யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

per vachaalum vaikkama song new record


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->