சூட்டிங்கில் கலந்து கொள்ளாத சிம்பு.. பத்து தல படக்குழு எடுத்த அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் மற்றும் நார்தன் இயக்கத்தில் பத்து தல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அடுத்ததாக, சிம்புவின் 50-வது திரைப்படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்கவுள்ளதாக கூறப்படுகசிம்பு.!தற்போது தந்தை டி ராஜேந்திரன் சிகிச்சைக்காக அமெரிக்காவில் சிம்பு இருப்பதால் பத்து தல படத்தில் அவரால் நடிக்க முடியாமல் இருக்கிறது.

எனவே தற்போது படக்குழுவினர் மற்ற நடிகர்களின் காட்சிகளை தீவிரமாக படமாக்கி வரும் நிலையில் விரைவில் அமெரிக்காவில் இருந்து சிம்பு வந்தவுடன் அவருக்கான காட்சிகள் படமாக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pathu Thala Simbu Parts ignored


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->