போஸ்ட்டரை வெளியிட்டு ''அப்டேட்'' கொடுத்த பார்த்திபன்! உற்சாகத்தில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் திரைப்படங்களை இயக்கி தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல், நான் லீனியர் திரைக்கதை ஒரே சாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. 

இந்த திரைப்படத்தில் பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். 

இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். படத்தின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பை இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில், ''குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த திரைப்படத்தின் முதல் பார்வையை குழந்தை பருவத்திலேயே இசையின் விசையை அசைத்து பார்க்கும் லிடியன் நாதஸ்வரம் நாளை வெளியிடுவார்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பால் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parthiban movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->