மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர்.. ஓபிஎஸ் போட்ட ட்வீட்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நடிகர் விவேக் நேற்று சென்னையில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். கொரோனா தடுப்பூசி ஊசியை செலுத்தி கொண்ட பிறகு, எல்லாமும் கொரோனா தடுப்பூசி ஊசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. 

இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops tweet for actor vivek


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->