வெங்கட் பிரபு படத்தில் ஒருநாளும் நடிக்கமாட்டேன் - நடிகர் ராமராஜன் தடாலடி.!! - Seithipunal
Seithipunal


மக்கள் நாயகன் ராமராஜன் பல ஆண்டுகளுக்குப் பிறகு  சாமானியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீண்ட்ரி கொடுத்துள்ளார். சாமானியன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான எல்கேஜி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்ததாகவும் எனது கதாபாத்திரம் இடைவேளைக்கு பிறகுதான் வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

சாமானியன் திரைப்படம் குறித்து பல சேனல்களுக்கு பேட்டி குடுத்துக்கொண்டு வருகிறார் ராமராஜன். ஒரு தனியார் சேனலில் பேசிய ராமராஜன், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவராமல் இருக்கும் திரைப்படம் பார்ட்டி. அதித்திரைப்படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். நான் சில காரணங்களுக்காக தவிர்த்து விட்டேன் என்றார்.

பின்னர், படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது அதில் மது புகை போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதைப்பார்த்த, ராமராஜன் அந்த திரைப்படத்தில் நடிக்காததே மகிழ்ச்சி என்றார்.

தொடர்ந்து பேசிய ராமராஜன், மது புகை போன்ற காட்சிகள் இடம்பெறும் திரைப்படங்களில் கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் ஒரு நாளும் நடிக்க மாட்டேன் என்றார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் படத்திலே போதை சம்பந்தமான காட்சிகள் வருவது வேதனைக்குரியது என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no act vengat prabhu film Ramarajan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->