சோ க்யூட்.. நித்யாமேனனின் க்யூட் சிறுவயது புகைப்படம் வைரல்.! - Seithipunal
Seithipunal


நடிகை நித்யாமேனன் தென்னிந்திய சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் பின்னணி பாடகியாகவும் இருப்பவர். நடிகை நித்யா மேனன் குண்டே ஜாரி கள்ளந்தய்யிந்தே மற்றும் மல்லி மல்லி இடி ரணி ரோஜு ஆகிய தெலுங்கு திரைப்படம் இரண்டிலும் நடித்து ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றார். 

மலையாள குடும்பத்தைச் சேர்ந்த நித்யா மேனன் இதழியல் படித்துள்ளார். அவருக்கு நடிப்பை விட பத்திரிகையாளராக பணியாற்றுவதில் தான் அதிக விருப்பம் இருந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இவர் ஒளிப்பதிவாளர் படிப்பையும் முடித்துள்ளார். தமிழில் வெப்பம், உருமி, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, 24, இருமுகன், மெர்சல் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 

நடிகை நித்யா மேனன் தெலுங்கிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு தற்போது இரண்டு திரையுலகிலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிகை நித்யா மேனன் கொழுக் மொழுக் என்று இருப்பதுதான் அவருக்கு மிகப்பெரிய பிளஸ்.‌ இதனாலேயே அவருக்கு நிறைய ரசிகர்கள் இருந்தனர்.

சமீபகாலமாக நித்யா மேனன் உடல் எடை குறைந்து இருப்பதும் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் போக காரணமாக இருக்கலாம். சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை நித்யா மேனன் வெளியிட்டு வருவது வழக்கம்.  இந்த நிலையில் நித்யாமேனனின் சிறுவயதில் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nithya menon childhood photo viral


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal