நெஞ்சுக்கு நீதி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்..! படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் மற்றும் அரசியல்வாதி என்று பன்முகத் திறமை கொண்ட உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தற்போது இருக்கிறார். 

உதயநிதி திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் அதிகப்படியான மக்களை சென்றடைய முடியும் என்பது கட்சியின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அவர் போனிகபூர் தயாரிக்கும் ஆர்டிக்கிள் 15 ரீமேக் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை போனிகபூர் இயக்க இயக்குனர் அருண் காமராஜ் இயக்குகிறார். 

இந்த திரைப்படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில், தற்போது இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தற்போது இந்த அறிவிப்பை உதயநிதி தனது ட்வீட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nenjukku needhi movie get UA certificate 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->