ஓடிடி தளத்தில் வெளியாகும் நயன்தாரா திரைப்படம்: வைரலாகும் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


இந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'அன்னபூரணி' 

இந்த திரைப்படத்தில் சத்யராஜ், சுரேஷ் சக்கரவர்த்தி, கே.எஸ். ரவிக்குமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஜி ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அதாவது, அன்னபூரணி திரைப்படம் வருகின்ற 29ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 

இதனை பட குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->