நயன்தாராவின் பிறந்த நாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. விக்னேஷ் சிவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் ஐயா திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை நயன்தாரா. அதன்பின்னர் அவர் சந்திரமுகியில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரஜினியுடன் நடித்தது தொடர்ந்து நயன்தாராவின் மார்க்கெட் உயர ஆரம்பித்தது.

அதன்பிறகு தல அஜித் மற்றும் தளபதி விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நயன்தாரா ஜோடி போட ஆரம்பித்தார். ஒரு காலகட்டத்தில் ஹீரோயினாக நடிப்பதை விடுத்து நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் அறம், மாயா, கோலமாவு கோகிலா, ஐரா, இமைக்கா நொடிகள் போன்ற முக்கிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

சமீபத்தில் அவர்  தனது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்தனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 18ம் தேதி 'கனெக்ட்' திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை 'மாயா' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nayanthara connect movie teaser released on November 18


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->