"இனி முழு மூச்சுடன்" நமீதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2004-ல் வெளியாகிய நடிகர் விஜயகாந்த் நடிப்பில், 'எங்கள் அண்ணா' திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டில் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகை நமீதா. முதல் திரைப்படத்தில் பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

ஒருகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் தான் நமீதா. நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகிய நடிகர்களுடன் சேர்ந்து நமீதா நடித்துள்ளார். அதன் பின், கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்துள்ளார்.

நமீதாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலை காட்ட துவங்கினார். அதன் பின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். தொடர்ந்து கடந்த 2017-ல் தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருந்தன. இந்நிலையில், நடிகை நமீதா திருப்பதியில் தனது கணவருடன் சாமி தரிசனம் செய்தார். 

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திருப்பதிக்கு குழந்தைகள் ஆரோக்கியத்தை வேண்டி வந்ததாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இனி தான் முழுமையாக அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nameetha about her poltics life


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->