பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல்..!! - Seithipunal
Seithipunal


இந்திய திரை உலகின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தவறி விழுந்ததில் அவர் மரணம் அடைந்திருக்கலாம் என முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த 78 வயதாகும் வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி என 19 மொழிகளில் 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த 1974ம் ஆண்டு தீர்க்க சுமங்கலி என்ற திரைப்படத்தில் மல்லிகை என் மன்னன் மயக்கம் என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமானார். இவர் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மவிபூஷன் மற்றும் திரைப்பட பின்னணி பாடகர்களுக்கான தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலதரப்பட்ட மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசைஞானி இளையராஜா  வீடியோ வெளியிட்டு பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Music director Elayaraja condolence to singer Vani Jairam


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->