நீ விதைத்த வினையெல்லாம்., புளூ சொக்கா மாறனின் ஆன்டி இந்தியன்..! அப்படித்த சென்சார் குழு..!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரைப்படங்களை சரமாரியாக விமர்சித்து வந்த நீல சட்டை மாறன் ஆன்டி இந்தியன் என்ற படத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தால், அவரின் திரைப்படத்தை சென்சார் போர்டு தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளது.  

பழம் தின்று கொட்டை போட்ட இயக்குனர் போல தன்னை காட்டி, கோடிக்கணக்கில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை நான்கு நிமிட வீடியோவில் மொத்த படத்தையும் வறுத்தெடுத்து பலரின் வயிறெரிச்சல்களை கொட்டிக்கொண்ட நீலச்சட்டை மாறன், ஆன்டி இந்தியன் என்ற படத்தை தனது திறமையால் இயக்கியுள்ளார். 

இந்த படத்தை சென்சாருக்கு அனுப்பிய நிலையில், படத்தை எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் பார்த்த சென்சார் குழு, படம் முடிந்ததும் சத்தமே இல்லாமல் படத்திற்கு தடை தான் என்று அதிரடியாக கூறி நீலச்சட்டை மாறன் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆதம் பாவாவை அதிரவைத்துள்ளனர். 

மேலும், இந்த படத்தில் உள்ள பெரும்பாலான காட்சிகள் 2 மணிநேரம் ஓடும் படத்தில், பெரும்பாலான காட்சிகள் மத நம்பிக்கைகள் மற்றும் மத அமைப்பு குறித்த விமர்சனங்களை முன்வைத்து இருப்பதாகவும், படம் வெளியானால் மத ரீதியான கலவரங்கள் கட்டாயம் உருவாகும் என்றும் சென்சார் போர்டு அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர். 

மேலும், உடல்நிலை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில், படத்தில் உள்ள பெரும்பாலான காட்சிகள் நடிகர் ரஜினிகாந்தை கேலி செய்வதுபோல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிடலாம் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தாலும், சர்ச்சைக்குரிய காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டால் மொத்த படமும் அரைமணி நேரம் மட்டுமே இருக்கும் என்றும் சென்சார் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Tamil online news Today News in Tamil

தமிழ் திரைப்படங்களை சரமாரியாக விமர்சித்து வந்த நீல சட்டை மாறன் ஆன்டி இந்தியன் என்ற படத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தால், அவரின் திரைப்படத்தை சென்சார் போர்டு தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Movie Sensor Board Banned BlueSattai Maran Anti Indian Movie 10 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->