குடிகார மாஸ்டர் திருந்தியது எதனால்?.. மாஸ்டர் சொல்ல வருவது என்ன?..! - Seithipunal
Seithipunal


நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின்னர் திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். திரையரங்கில் படம் வெளியான சில மணிநேரத்திற்கு உள்ளாகவே, மாஸ்டர் திரைப்படம் திருட்டுத்தனமாக இணையத்திலும் வெளியாகியது. முன்னதாக படத்தின் பல காட்சிகள் கத்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்தது. 

இந்த படத்தின் மையக்கரு, தலைநகரில் குற்றப்பின்னணியில் இருக்கும் சிறார்களின் மற்றொரு பக்கத்தை மையமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. குற்றப்பின்னணியில் இருக்கும் சிறார்கள் யாரால்? எதற்காக? இவ்வாறு இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் கொலை செய்து, அதனை கெத்து என்று எண்ணிக்கொண்டு இருக்கும் வேலையில், சிறார் சிறைக்கு செல்லும் கதாநாயகன் எப்படி அவர்களை திருத்துகிறார். எதிரியை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை. 

இப்படத்தின் முதல் பாதியில் கல்லூரி பேராசிரியாக நடந்திருக்கும் விஜய் முழுநேர போதை பேராசிரியராக இருப்பது போலவும், கல்லூரிக்கே மது அருந்திவிட்டு வருவது போலவும் காட்சிகள் அமைந்துள்ளது. முழுபோதையில் கல்லூரிக்கு வந்தாலும், அனைவரிடமும் சரியான முறையில் நடந்துகொள்கிறார். இது குறித்த காட்சிகள் முடிந்ததும், கதாநாயகன் குடிப்பழக்கத்தை கைவிடும் சூழ்நிலையும் வருகிறது.

ரசிகர்கள் கைதட்டக்கூடிய வசனமாக அமைந்த, " குடிப்பழக்கத்தை ஏற்றுக்கொள்ள காரணம் கூறமாட்டேன், நிறுத்துவதற்கான காரணம் பசங்க தான் " என்பது இருந்தது. ஆனால், திரையரங்குகளில் விஜய் மது அருந்தும் காட்சிக்கு இருந்த வரவேற்பும், ஆரவாரமும், கைத்தட்டலில் ஒன்று கூட மதுவை நிறுத்துவதற்கான காரணத்தின் போது இல்லை. 

திரையுலகில் அடுத்த சூப்பர் ஸ்டார், உலகத்திலேயே நாங்கள் தான் வசூலில் சாதனை செய்துள்ளோம் என்று பல பெருமை பேசினால் மட்டும் போதாது, இளைஞர்களுக்கு சில நல்ல கருத்துக்களை கூறி, கைதட்டல் எங்கு வருகிறது என்பதை கவனித்து விஜய்யை இயக்க வரும் இயக்குனர்கள் செயல்பட்டால் நல்லது என்று சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

பள்ளியில் படிக்கும் மாணவர்களில் இருந்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் குற்றப்பின்னணியுடன் பல வெளியுலகம் அறியாத சிறார்களை நல்வழிப்படுத்தும் மாஸ்டரின் கதைக்களம் நல்ல கருத்தை கொண்டிருந்தாலும், இன்றுள்ள இளைஞர் பட்டாளம் மதுபோதை, புகைபிடிப்பது, துரத்தி துரத்தி காதல் செய்வது என விபரீத செயல்களை செய்து வம்பில் மாட்டி வருகிறது. 

போறபோக்கில் கிடைத்த கதையை நடித்துவிட்டு செல்லாமல், ரசிகர்களுக்கு தேவையான கருத்து சொல்வதும் படத்தின் முக்கியத்துவம் ஆகிறது. நல்ல நடிகராக தனது ரசிகர்களுக்கு நல்வழிப்படுத்தும் கருத்துக்களை கூற வேண்டும். குறைந்தபட்சம் இளைஞர் பட்டாளத்தை சீரழிக்கும் செயல்களில் ஈடுபடுவதை குறைக்க வேண்டும். 

திரைத்துறையை சார்ந்தவர்கள் சமூக பொறுப்புடன் நடந்து கொண்டால் சமூகத்திற்கும் நல்லது. நடிகர்களின் உடல் நலத்திற்கும் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது அல்லது துவக்கத்தில் வரும் புகை, மது தொடர்பான வாசகங்களை கதாநாயகர்களின் குரல் பதிவில் வந்தால் நல்லது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Master Movie Vijay Drinking Alcohol Issue


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal