வெற்றிக்கொண்டாட்டத்தில் மாநாடு படக்குழு.. கேக் வெட்டி உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


சிம்பு மற்றும் வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகிய மாநாடு படம் மெகா ஹிட் அடித்து வருகின்றது. படக்குழுவினர் கூட எதிர்பார்க்காத அளவு இந்த திரைப்படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பாராட்டுகளை பெற்று வருகின்றது. உண்மையில் சிம்புவே மாநாடு இவ்வளவு புகழ் பெறும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்.

டைம் லூப் கான்சப்டை அடிப்படையாகக்கொண்ட இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமாக மற்றும் சுவாரசியமாக இருந்தது. அத்துடன், படத்தில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. வில்லன் கதாப்பாத்திரமும் மக்கள் ரசிக்கும் படி இருந்தது படத்துக்கு மேலும் பாஸிடிவாக அமைந்தது.

மாநாடு திரைப்படத்தை பார்த்துவிட்டு திரைப்பிரபலங்கள் பலரும் தற்போது அடக்குழுவை பாராட்டி வருகின்றனர். இது படக்குழுவுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், படம் முதல் நாளில் ரூ.8.2 கோடியும் இரண்டாவது நாளில் ₹.14 கோடியும் வசூல் செய்துள்ளதாம். மொத்தமாக வெறும் இரண்டே நாளில் ₹.23 கோடி வரை வசூல் செய்தது ஆச்சர்யமானதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் பொருட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manadu victory team celebration


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal