பிரபல மலையாள நடிகையுடன் இயக்குனர் லீனா மணிமேகலை..! - Seithipunal
Seithipunal


தமிழில் பல படங்களையும் பல ஆவணப் படங்களையம் இயக்கி பலரது கவனத்தை பெற்றவர் லீனா மணிமேகலை. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதத்திற்கும் உள்ளானது. 

இந்த ஆவணப்படத்தின் போஸ்டரில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அதனால் உடனடியாக லீனா மணிமேகலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் மற்றும் இந்துத்துவவாதிகள் இயக்குநருக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். 

இதற்கிடையே, இயக்குநர் லீனா மணிமேகலையின் மீது டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் போலீசார் வழக்கு தொடரப்பட்ட நிலையில், வருகிற நவம்பர் 1 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் இயக்குனர் லீனா மணிமேகலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். 

இந்நிலையில் லீனா மணிமேகலை அடுத்ததாக இயக்கும் படத்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகை பார்வதி நடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

இப்படத்திற்கு 'தன்யா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் இப்படம் சைபர் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 

ஏற்கனவே இவரின் 'காளி' பட போஸ்டர் பெரும் சர்ச்சையானதால் அந்த வகையில் இப்படமும் ஏதாவது சர்ச்சையை உருவாக்குமா என்பது இந்த படத்தின் போஸ்டர் வெளியான பின்புதான் தெரிய வரும்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

malayala heroine parvaty act in director leena manimekalai next movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->