இது என்னடா லியோக்கு வந்த சோதனை - பேனர்களை வைக்க உயர்நீதிமன்றம் தடை!’ - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடத்திருக்கும் லியோ திரைப்படம் வருகிற 19ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். 

அதில், "வரும் 19ஆம் தேதி வெளியாகும் நடிகர் விஜயின் லியோ படத்திற்காக திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு திரையங்குகள் முன்பு மிக உயரமான பேனர்கள், கட் அவுடுகள், பிளக்ஸ்களை வைத்துள்ளனர். 

பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அதிக ஒலிகளை எழுப்பும் பட்டாசுக்களை வெடிக்கவும் திட்டமிட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றுத் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இந்த மனுவானது மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், திரையரங்குகள் முன்பு ப்ளக்ஸ் பேனர்கள் வைக்க எந்த அனுமதியும் தரவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேபோல், மனுதாரர் தரப்பில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் திண்டுக்கல் மாநகராட்சி வழக்கறிஞரை அழைத்து விளக்கம் கேட்டபோது, அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்கள் ஏற்கெனவே அகற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ’அனுமதி இன்றி லியோ படத்தின் பேனர்களை வைக்க கூடாது’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai high court order bans putting leo movie banners


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->