வெளியானது "லவ்வர்" படத்தின் ட்ரைலர்.! - Seithipunal
Seithipunal


குட் நைட் திரைப்படத்தில் நடித்து பலரையும் கவர்ந்தவர் நடிகர் மணிகண்டன். தற்போது இவர் அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றதையடுத்து இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தத் திரைப்படம் வருகிற 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lover movie trailer released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->