லவ் டுடே' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே.  இந்தத் திரைப்படத்தில் நாயகனாகவும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிமுகமாகியுள்ளார். 

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். காதல், காமெடி, பொழுதுபோக்கு என்று 2 கிட்ஸ் விரும்பும் படமாக வந்துள்ள இந்த ‘லவ் டுடே’ திரைப்படத்தில், நடிகர் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியான திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை இப்படம் ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'லவ் டுடே' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Love today movie OTT release on December 2nd in Netflix


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->