இது வெறும் ட்ரைலர்தான் கண்ணா.! தியேட்டருக்கு வாங்க.!! மனம் திறந்த எல்.கே.ஜி இயக்குனர்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் ஆர்.ஜே.பாலாஜி - நடிகை பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் எல்.கே.ஜி. இந்த படமானது முழுக்க முழுக்க தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி., அதனை கிண்டல் செய்யும் வகையில் உருவாகியுள்ள படம்.

இந்த படத்தில் அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து., படத்தின் வெளியீட்டுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்., இசைஞானி இளையராஜா 75 நிகழ்ச்சியில் படத்தின் ட்ரைலர் வெளியானது.

தற்போது வரை சுமார் இரண்டு கோடியே 8 இலட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை கடந்து கொண்டு இருக்கும் நிலையில்., இந்த படம் குறித்து இயக்குனர் கே.ஆர்.பிரபு மனம் திறந்துள்ளார். 

எல்.கே.ஜி படத்தின் ட்ரைலருக்கு அதிகளவில் ரசிகர்கள் வரவேற்பு அளித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது., இந்த ட்ரைலரில் இருப்பது குறைவான காட்சிகள் தான்., படத்தில் பல நையாண்டி விஷயமும்., சிந்திக்கவைக்கும் விஷயமும் இருக்கிறது. இந்த ட்ரைலரை இளையராஜா 75 நிகழ்ச்சியில் வெளியிட்டது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LKG movie director talks about movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->