லியோ படத்திலிருந்து விலகினாரா திரிஷா.? அவரே வெளியிட்ட பதிவு வைரல்.! - Seithipunal
Seithipunal


தளபதி விஜயின் 67வது திரைப்படத்தில் நடிகை திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். காஷ்மீரில் லியோ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை நடைபெற்று வருகின்றது. சில நாட்களுக்கு முன் பட குழு கிளம்பி சென்ற நிலையில் மூன்று நாட்கள் முடிவில் திரிஷா சென்னை திரும்பி உள்ளார். 

இது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்து வருகிறது. படப்பிடிப்பில் நடிகை திரிஷா மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியேறிவிட்டார் என்று தகவல்கள் வைரலானது. 

இந்த நிலையில் இது குறித்து தற்போது ஒரு புகைப்படத்தை புதிதாக பகிர்ந்துள்ளார். காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவின் காரணமாக அவரால் அங்கு இருக்க முடியவில்லையாம். எனவே அங்கிருந்து அவர் டெல்லியில் வந்து தங்கி இருக்கிறாராம்.

தற்போது மீண்டும் அவரது காட்சிகளில் நடிக்க அவர் காஷ்மீருக்கு செல்கின்றாராம். அவர் அப்படி காஷ்மீருக்கு விமானத்தில் சென்ற போது காஷ்மீரில் பன்னீர் கொட்டும் புகைப்படத்தை அவர் பகிர்ந்து இருக்கிறார். 

திரிஷா சென்னைக்கு திரும்பி விட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் இன்னமும் காஷ்மீரில் தான் இருப்பதை உறுதி செய்துள்ளது அந்த புகைப்படம். எனவே லியோ படத்திலிருந்து அவர் வெளியேறியதாக வைரலான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo movie Trisha confirmed that


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal