என்னது இது எல்லாம் பொய்யா? பிளாஷ்பேக் காட்சியில் ட்விஸ்ட் கொடுத்த லோகேஷ்! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த திரைப்படம் வெளியாகி முதல் வாரத்தில் ரூ. 461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் படத்தின் வெற்றி விழா வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. 

படத்தின் முதல் பாதி சிறப்பாகவும் இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சிகள் சரியாக இல்லை எனவும் விமர்சனங்கள் வந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிளாஷ்பேக் காட்சிகள் உண்மையானது இல்லை என தெரிவித்துள்ளார். 

இது குறித்து லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் பேசிய போது தெருவித்திருப்பதாவது, ''இருதயராஜ் (மன்சூர் அலிகான்) கதாபாத்திரம் லியோ பிளாஷ்பேக் கதையை தெரிவிக்கிறார். 

அவர் பொய்யாக கூட சொல்லி இருக்கலாம். அது அவரது பார்வையில் தெரிவிக்கப்பட்ட கதை. முதலில் அவர் பேசும் சில வசனங்கள் இருந்தன. 

பின்னர் கதையின் சுவாரசியத்துக்காக அதனை நீக்கி விட்டோம். அதில் அவர், ஒரு கதையை யார் பார்வையில் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இது என்னுடைய பார்வை என தெரிவிப்பார். 

இந்த வசனம் வந்தால் அடுத்த 20 நிமிடங்கள் முற்றிலும் பொய்யானது என எளிமையாக நினைப்பார்கள் என்று எடிட்டர் தெரிவித்ததால் அதனை நீக்கி விட்டோம். லியோ தனது கதையை எங்குமே தெரிவிக்கவில்லை. அதனை அவர் தெரிவித்தால்தான் உண்மை'' என்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo flashback scene Lokesh speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->