பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்., கண்ணீரில் தலைவர்கள்.!  - Seithipunal
Seithipunal


பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.

92 வயதான பழம் பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்று, நிமோனியா உள்ளிட்டவற்றில் இருந்து மீண்டு வந்த அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக மாறியதால், அவருக்கு ஐ.சி.யூ.வில் வெண்டிலேட்டர் மூலம் உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டடு, மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கரின் உயிர் பிரிந்ததாக மும்பை பிரீச்கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

20-க்கும் அதிகமான மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர், கடந்த 2001-ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர் குறிப்பிடத்தக்கது.

லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lata Mangeshkar death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->