விசு படத்தின், "கோதாவரி" கமலா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா.?! புகைப்படத்தால் ஷாக்.!  - Seithipunal
Seithipunal


1980களில் பல்வேறு படங்களில் மிகவும் அமைதியான அம்மா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கமலா காமேஷ். இவர் சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி, குடும்பம் ஒரு கதம்பம் உள்ளிட்ட படங்களில் நடிகர் மற்றும் இயக்குனருமான விசுவுக்கு ஜோடியாக மிகவும் சாதுவான அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். 

அவருடைய கோதாவரி கேரக்டர் அந்த படம் பார்த்த யாராலுமே மறக்க முடியாது என்றால் அது மிகையாகாது. கமலா தமிழ் மட்டுமின்றி மலையாள படங்கள் பலவற்றிலும் நடித்து இருக்கின்றார். இவர் இதுவரை 400க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து இருக்கின்றார். அதன் பிறகு படப்பிடிப்பின் போது இடுப்பில் அடிபட அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் நடிப்பிலிருந்து விலகினார். 

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தற்பொழுது இவருடைய மகளான உமா ரியாஸ் கலந்து கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கின்றார். அவர் அந்த போட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து அட நம்ம கோதாவரியா இது என ஆச்சர்யத்தில் மூழ்கி போகின்றனர். 

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு தோற்றம் முழுதும் மாறிவிட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodhavari kamala recent picture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->