ஊரடங்கால் பறிபோன வருமானம்.. ஆட்டோ ஓட்டும் பிரபல நடிகை.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தீவிரம் கடுமையான அளவு அதிகரித்துள்ள சூழ்நிலையில், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக தினகூலித்தொழிலாளர்களில் இருந்து அனைத்து தரப்பிலும் கடுமையான அவதியை மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதில் திரைத்துறையை சார்ந்த நபர்களும் விதிவிலக்கல்ல.. 

கேரள மாநிலத்தில் உள்ள நாடக நடிகை மஞ்சு, மேடை நாடகம் மூலமாக கடந்த 15 வருடமாக தனது வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தனது சேமிப்பு மற்றும் கேரள மக்களிடம் கடன் பெற்று ஆட்டோவினை வாங்கியுள்ளார். 

நாடகம் முடிந்ததும் வீட்டிற்கு ஆட்டோவில் திரும்பிய மஞ்சுவுக்கு, கொரோனா ஊரடங்கு வேலையின்மை காரணமாக ஆட்டோ இயக்கி தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். மேலும், இவரின் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Live Drama Artist Manju make profit Drive Auto Rickshaw


கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..




கருத்துக் கணிப்பு

முதல்வர் திடீரென மாவட்டங்களுக்கு சென்று வருவது..




Seithipunal