இரவு பார்ட்டிகளுக்கு செல்லும் நடிகை கீர்த்தி சுரேஷ்!! வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!!
keerthi suresh in night party
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து விஜய் ,சூர்யா, விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.
மேலும் அவர் அதனைத் தொடர்ந்து சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் என்ற படத்தில் சாவித்திரியாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார் .மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. படவாய்ப்புகளும் குவிந்தது. இந்நிலையில் அவர் தற்போது பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்
தற்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் பெயரிடப்படாத ஹிந்தி படம் ஒன்றும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்திசுரேஷ். இதனால் அடிக்கடி மும்பை செல்லும் நடிகை கீர்த்திசுரேஷ் மும்பை கலாச்சாரத்திற்கு மாறிவருவதாகவும், அவ்வப்போது இரவு பார்ட்டிகளுக்கு செல்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிலும் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூருடன் கீர்த்திசுரேஷ் நன்கு பழகிவருவதாகவும், இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்துதான் பார்ட்டிக்கு செல்வதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில் இவர்கள் இருவரும் உள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது.
English Summary
keerthi suresh in night party