அடடே.. அண்ணாத்த பட நடிகைக்கு விரைவில் டும்.. டும்.?! வைரலாகும் புகைப்படம்.!
keerthi suresh family photo in nellai
தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் வெளியாகின்ற திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்.
இவரது கைவசம் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் இருக்கின்றன. கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக கிளாமராக கூட நடிக்க துவங்கி இருக்கின்றார். சமூக வலைதள பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.அடிக்கடி தனது குடும்பத்துடன் அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

அவை அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். அந்த வகையில், சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் பெருமாள் கோவிலுக்கு சென்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நடப்பதால் அங்கே இருக்கும் பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று கீர்த்தி சுரேஷ் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷுக்கு தொழிலதிபர் ஒருவருடன் எளிமையான முறையில் திருமணம் நடக்க இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.
English Summary
keerthi suresh family photo in nellai