ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தினை பின்னுக்கு தள்ளிய பாலிவுட் திரைப்படம்.! கங்கனா ரனாவத் ட்விட்டரில் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்ற ஆர்.ஆர்.ஆர்  திரைப்படத்தின் சாதனைகளை பாலிவுட் படம் ஒன்றே தற்போது முறியடித்திருக்கிறது. இந்தச் செய்தி வெளியாகி பாலிவுட் ரசிகர்களை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.

கடந்த ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில்  பான் இந்தியா சினிமாவாக வெளியானது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். கடந்த ஆண்டு வெளியாகி 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த திரைப்படம் சாதனை படைத்தது.

மேலும் நெட்ப்ளிக்ஸ் இணையதளத்திலும் அதிக மணி நேரங்கள் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படம் என்ற சாதனையும்  ஆர்.ஆர்.ஆர் வசமே இருந்தது. netflix இணையதளத்தில் ஆர்.ஆர்.ஆர்  திரைப்படம் வெளியான இரண்டு வாரங்களில் 25,540,000 பார்வை நேரங்களை பெற்று அதிக நேரம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற சாதனையை வைத்திருந்தது. தற்போது பாலிவுட் படமான சோர் நிகல் கே பாகா என்ற திரைப்படம் இந்த சாதனையை முறியடித்து இருக்கிறது.  

யாமி கௌதம், சரத் கேல்கர், சன்னி  கௌசல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் கடந்த 24ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் நேரடியாக வெளியானது. விமானக் கடத்தலை கதை கருவாகக் கொண்ட இந்த திரைப்படம்  வெளியான இரண்டு வாரங்களில் 29,000,000 பார்வை நேரங்களைக் கடந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இந்த சாதனைகளை பாராட்டி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவிற்கும் யாமி கௌதம் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kangana Ranaut congratulates Bollywood film on OTT for breaking RRR film record


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->