தொட்டால் ஷாக் அடிக்கும்.! நடிகை ரோஜா பங்கேற்ற விழாவில் அமைச்சர் பேச்சு.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமா ஒப்பனைக் கலைஞர்கள் சார்பில் அகாடமி ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு ஆந்திர எம்எல்ஏவான நடிகை ரோஜா கலந்து கொண்டார்.  நிகழ்ச்சியின்போது அமைச்சர் செல்லூர் ராஜு பேசியபோது, "எங்களுடைய தலைவி ஜெயலலிதா சினிமாவிலிருந்து தான் வந்தார். அவர் கூறிய கருத்துக்களை எல்லாம் கேட்டு தான் நாங்கள் அரசியலுக்கு வந்தோம். எனக்கு அவர் செய்தித்துறை அமைச்சர் பதவியை கொடுத்தபோது அதில் மற்ற துறைகள் எல்லாம் என்ன இடம் பெறும் என்பதையும், கூறிய அவர் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். சினிமா துறை மின்சாரம் போன்றது. நன்கு ஒளி கொடுக்கக்கூடியது. 

ஆனால், தவறுதலாக கை வைத்தால் ஷாக்கடித்து விடும் என்று தெரிவித்திருக்கிறார். திரைப்பட ஸ்டுடியோ அமைக்க 5 கோடி செலவில் சினிமா ஸ்டுடியோ அமைத்து தர இருக்கிறோம். என்று அதற்கான நிதி அளித்தார். அவர் வழியை பின்பற்றி 150 படங்களுக்கு தலா 7 லட்சம் மானியமாக கொடுத்தார் தற்பிதைய முதல்வர். 

அதுபோலவே கொரோனா காலகட்டத்தில் சினிமா துறை பாதிக்கப்பட்டிருந்த பொழுது அரசு அவர்களுக்கு நிறைய உதவி செய்தது. மீண்டும் தொழில் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்ததும் தமிழக அரசுதான். இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது." என்று அவர் தெரிவித்துள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kadambur Raju speech in a chennai function


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->