காப்பான் திரைப்படம் திரைவிமர்சனம்..!!  - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யாவிற்கு பெரும் எதிர்பார்ப்பை தந்த திரைப்படம் தான் காப்பான். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார்., இதனை போன்று திரையுலக பிரபலங்களான சாயிஷா, மோகன் லால், ஆர்யா, புமன் இரானி., சமுத்திரக்கனி., தலைவாசல் விஜய், பிரகாஷ்ராஜ் போன்ற திரையுலக நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கான இசையமைப்பு பணியை யுவன் சங்கர் ராஜாவும்., எடிட்டிங் பணியை ஆண்டனி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் பட்டுக்கோட்டை சுதாகர் இயக்கியுள்ள நிலையில்., இப்படம் lyca production நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு: 

ஏற்கனவே வெளியான அறிவிப்பின் படி செப்டம்பர் 20 ஆம் தேதி காப்பான் திரைக்கு வருவதாக இருந்த நிலையில்., இன்று திரைக்கு வந்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் அனைவரும்., முந்திக்கொண்டு திரையரங்கிற்கு சென்று படத்தை பார்க்க துவங்கினர். 

இந்த படத்தை பற்றி ஒரே வரியில் கூடவேண்டும் என்றால்., அன்றைய காலத்து விஜயகாந்த் திரைப்படங்கள் போன்று தான் இருக்கும். இப்படத்தின் இயக்குனர் நடிகர் விஜயகாந்திற்கு கதைகளை எழுதிவிட்டு., சூர்யாவை நடிக்க வைத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். 

kaappaan, காப்பான்,

பார்ப்பவர்கள் எல்லாரும் சூர்யாவிற்கு என்ன தான் ஆச்சு.. ஏன் இப்படி பண்ணுகிறார்? என்ற கேள்வியை கேட்க வைத்துள்ளார். ரசிகர்கள் வேண்டும் என்றால்., மன மகிழ்ச்சிக்காக ஆகா.. ஒஹோ என்று சொல்லலாமே தவிர., சில ரசிகர்களும் சோகமடைந்த நிகழ்வும் இருக்கிறது. 

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்., ஓடும் இரயிலை ஒரு கையில் நிறுத்துவது வடிவேல் காமெடியில் சொல்லலாமே தவிர., நிஜத்தில் செய்ய முயற்சிப்பது முட்டாள் தனம் என்று தான் கூற வேண்டும். இறுதியாக படத்தை ஒரு முறை திரையரங்கில் சென்று பாருங்கள்...

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kaappaan movie review seithipunal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->