'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு நடனமாடிய ஜூலி.! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் உம் சொல்றியா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. 

படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. கேஜிஎப் திரைப்படம் அளவிற்கு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் ஒரு முறை பார்க்கலாம் என்ற ரீதியில்தான் விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்தப் படம் குறித்த விமர்சனங்களில் பெரும்பாலான ரசிகர்கள் சமந்தாவின் கவர்ச்சி நடனத்தை காணவே தியேட்டருக்கு வந்ததைப் போல பேட்டி அளித்து இருக்கின்றனர். அத்துடன் சமூக வலைதளங்களிலும் சமந்தாவின் ஒரு பாடலுக்காக தான் இந்த முழு படத்தையும் பார்த்ததாக மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றது. 

இந்தநிலையில் இந்த பாடலுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஜூலி நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் லோ பட்ஜெட் சமந்தா என கிண்டல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Julie dance oo solriya mama song


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->