ஜெயலலிதா தொடர்பான வழக்கில் அதிரடியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதற்கு அவரது அண்ணன் மகள் ஜெ தீபா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது இணைய தொடராக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் எடுத்திருக்கும் குயின் என்ற தொடரை வெளியிட தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

தமிழக முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. அவருடைய அண்ணன் மகள் ஜெ தீபா. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக  தலைவி என்ற பெயரில் இயக்குனர் விஜய்யும், இணைய தொடராக இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் குயில் என்ற பெயரிலும் எடுத்து வருகிறார்கள். 

ஏற்கனவே திரைப்படமாக எடுப்பதற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கும் நிலையில் அதற்கு நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த நிலையில் குயின் என்ற இணையதள தொடரை கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிடக் கூடாது என தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் தீபா. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விவகாரம் குறித்து பதிலளிக்க இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு கடந்த வாரம் உற்றவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது, அப்போது, தீபா கதாபாத்திரம் படத்தில் இடம்பெறவில்லை என கௌதம் மேனன் தரப்பு வாதிட்டது, இந்த வாதத்தை  ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தலைவி படம் முழுக்க முழுக்க கற்பனையானது என அறிவிப்பு வெளியிடப்பட பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

மேலும்,தலைவி படம், குயின் இணையதள தொடர் வெளியாக தடை இல்லை என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

குயின் தொடரின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குயின் தொடரில் ஜெயலலிதாவாக நடிகை ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jayalalitha biopic case jundgement in court


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal