ஜவான் படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடிக்க அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை ஷாருக்கானின் சொந்த நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் நயன்தாராவின் ஜான் படத்தின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டிருந்தது

 இந்த நிலையில் இன்று ஜவான் படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் டீலர் ஆஃப் டெத் (மரணத்தின் வியாபாரி) என்ற கேப்ஷன் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் ஜவான் போஸ்டர் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jawan movie villain Vijay Sethupathi poster released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->