ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு எப்போது.? படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகின்ற தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தமன்னா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடிக்க உள்ள நிலையில் ஒரு சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்ற இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கின்றார். வரும் ஆகஸ்ட் 10 இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.


கடந்த வெள்ளிக்கிழமை ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில் இதில் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த விழா குறித்த காணொளி வரும் ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 6ம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jailor audio launch telecast on August 6 in Sun TV


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->