சுந்தர்.சி நடிகர் வடிவேலு வெற்றி கூட்டணி மீண்டும் இணைய போகிறதா ? - Seithipunal
Seithipunal


சுந்தர்.சி நடிகர் வடிவேலு வெற்றி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேல் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சுந்தர் சி நடித்த அரண்மனை 4 பேய் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை குவித்தது. இதனை அடுத்து மீண்டும் பேய் கதை ஒன்றை படமாக முடிவு செய்துள்ளார் சுந்தர் சி. இதில் சுந்தர் சி நாயகனாகவும் தமன்னா நாயகியாகவும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்க நடிகர்  வடிவேலுவிடம் சுந்தர் சி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே சுந்தர் சி வடிவேலு கூட்டணியில் வந்த தலைநகரம், வின்னர் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக அந்த படங்களில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளுக்கு பாராட்டு கிடைத்தது.

தற்போது மீண்டும் இருவரும் புதிய படத்தில் இணைய உள்ளதாக வெளியான தகவல் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. சுந்தர் சி ஏற்கனவே கலகலப்பு படத்தின் இரண்டு பாகங்களை எடுத்துள்ளார். இந்த படத்தின் மூன்றாவது பக்கத்தையும் உருவாக்க திட்டமிட்டு உள்ளார். கலகலப்பு 3 படத்தில் விமல் சிவா ஆகியோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is Sundar C actor Vadivelu winning alliance going to join again


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->