"இது புரியாம போச்சே...." நடிகர் விஜயின் இன்ஸ்ட்டா விஜயம்.? அரசியல் என்ட்ரிக்கு தானா.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தற்போது டாப் 3  கதாநாயகர்களை எடுத்துக் கொண்டால் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்த  இடத்தில் இருப்பவர் தளபதி விஜய். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போலவே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தனக்கென வைத்திருப்பவர். இவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி இன்றல்ல பல நாட்களாகவே  ரசிகர்கள் மத்தியிலும் தமிழக மக்களின் மத்தியிலும்  எழுந்து கொண்டிருக்கிறது.

தளபதி விஜய் இதுவரை தன்னுடைய அரசியல் பிரவேசம் மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து வெளிப்படையாக பேசாவிட்டாலும் அவரது திரைப்படத்தில் இடம் பெறும் சில வசனங்கள் மற்றும் அவரது நடவடிக்கைகள் அவரது எதிர்கால அரசியல் மீதான நாட்டத்தை வெளிக்காட்ட தவறுவதில்லை.

தனது ரசிகர் மன்றங்கள் எல்லாம் ஒன்றிணைத்து விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அதற்கென தனி கொடி  அறிமுகப்படுத்திய விஜய். தனது தந்தை அதை அரசியல்  கட்சியாக பதிவு செய்த போது கடிந்து கொண்டவர். ஆனால்  ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனது ரசிகர்கள் போட்டியிட்டால்  தன்னுடைய பெயரையும் விஜய் மக்கள் இயக்கத்தையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார். மேலும் சமீபத்தில் கூட  வாரிசு திரைப்படத்திற்கு முன்பாக தனது ரசிகர்களை சந்தித்து மிகப் பெரிய ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்.

தற்போது விஜய் மக்கள் இயக்கத்திற்கு என தனித்தனியாக youtube இன்ஸ்டாகிராம் போன்ற அதிகாரப்பூர்வ பக்கங்கள் வந்துள்ள நிலையில்  தளபதி விஜயும் ரசிகர்களுடன் தொடர்பிலிருக்க முதல் முறையாக இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வருகிறார். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது தளபதி மிக விரைவில்  அரசியலில் இறங்க இருக்கிறார் என்பதை காட்டுகிறது என அரசியல் வல்லுனர்களும் திரைத்துறை விமர்சகர்களும் கணித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is actor vijay insta entry is the code for politics entry


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->