சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ''12 th பெயில்''! வெளியான மாஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


கடந்த 14ஆம் தேதி ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா தொடங்கி இன்று நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் விது சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ''12த் பெயில்'' என்ற திரைப்படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விது சோப்ரா இயக்கத்தின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ''12த் பையில்''. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளின் வெளியாகி விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

விக்ரம் மாஸ்ஸி, மேத்தா சங்கர், ஆனந்த் வி ஜோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் மனோஜ்குமார் சர்மா ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவியின் வாழ்க்கை வரலாற்றை மயமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 

இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி ஓடிடியில் வெளியான பின்னர் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான 'பிலிம்பேர் விருது' வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

International Film Festival screened 12th Fail movie


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->