மகள்களுக்காக மனைவி மீதே புகார் கொடுத்த இசையமைப்பாளர் இமான்.!  - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் உருவான தமிழன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இசையமைப்பாளர் இமான். இவர் பாடகராகவும் இருந்து வருகின்றார். கடந்த 2008ஆம் ஆண்டு ஒரு பெண்ணை இமான் திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கும் நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018ல் பிரிந்தனர். தங்களது இரு மகள்களின் பாஸ்போர்ட்டும் இமானிடம் இருந்துள்ளது. 

குழந்தைகளை இமான் சந்திக்க கூடாது என்பதற்காக இமான் மனைவி மோனிகா அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முயற்சித்து வருவதாகவும், எனவே குழந்தைகளுடைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக தெரிவித்து புதிய பாஸ்போர்ட் மோனிகா பெற்றுள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இசையமைப்பாளர் இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கு குறித்த விசாரணையில் வரும் ஜூன் 9ஆம் தேதி மோனிகா பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

imman complaint against wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->