வேலை முடிஞ்சுச்சா... ஊருக்கு வந்துடனும்... பொன்னியின் செல்வன் நடிகர் மகனுக்கு கட்டளை.! - Seithipunal
Seithipunal


என்னதான் பிற மொழிகளில் நடித்து வந்தாலும்  ஒவ்வொரு நடிகருக்கென்று தங்களது தாய் மொழி மீதான பற்றும் தங்களின் மாநிலத்தின் மீதான பிரியங்களும் மாறாமல் இருக்கும். என்னதான் தாங்கள் வேறு மொழி திரைப்படங்களில் நடித்தாலும்  தங்களின் மொழி மீதும் பிறந்த மாநிலத்தின் மீதும்  மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருப்பார்கள் .

நீண்ட நாட்களாகவே தமிழ் சினிமாவில்  முன்னணி கதாநாயகராக நடித்துக் கொண்டிருப்பவர்  ஜெயராம். கேரளாவைச் சார்ந்த இவர் பெரும்பான்மையாக மலையாள திரைப்படங்களில் நடித்தாலும் தமிழிலும் அதிக அளவு நேரடியாக நடித்திருக்கிறார். முறைமாமன் தெனாலி போன்ற திரைப்படங்கள் இவரது நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவை.

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்  இரண்டு பாகங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் நாவலில் பெரும்பான்மையான வாசகர்களுக்கு பிடித்த ஆழ்வார்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். நேற்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். பாவ கதைகள் என்னும் இணையதள தொடரின் மூலம் நடிகராக அறிமுகமான இவர். விக்ரம் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடித்திருந்தார். மேலும் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் முழுக்க முழுக்க வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில்தான் . தற்போதும் சென்னையில்  ஜெயராமுக்கு சொந்தமான பங்களாவில் வசித்து வருகிறார். ஆனால் தனது மகன் கேரளாவில் வந்து வசிக்க வேண்டும் என்பது ஜெயராமின் விருப்பமாக இருக்கிறது . அவர் சென்னையில் வசிப்பது ஜெயராமுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதனால் மகனை கேரளா வரச் சொல்லி தொந்தரவு செய்வதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If you finish the work come to home town ponniyin selvan actor order his son


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->