"என் மகனுக்கான அனைத்து பொறுப்பையும் ஏற்கிறேன்" - டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு பொதுவெளியில் உறுதி கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ்!
I accept full responsibility for my son Madhampatti Rangaraj makes a public pledge following the DNA test
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா விவகாரம் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களிலும், திரையுலக வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், டிஎன்ஏ பரிசோதனை முடிவுக்கு பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் முதல் முறையாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிஸில்டா இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல்கள், பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், குழந்தையின் தந்தைத்துவம் தொடர்பான சர்ச்சை ஆகியவை நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தன. இந்த விவகாரம் மகளிர் ஆணையம் வரை சென்ற நிலையில், டிஎன்ஏ பரிசோதனை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது, "டிஎன்ஏ பரிசோதனையில் குழந்தை என்னுடையது என்பது நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் பார்த்துக்கொள்ள தயாராக இருக்கிறேன்" என்று ரங்கராஜ் தெரிவித்திருந்தார். பின்னர் நடைபெற்ற டிஎன்ஏ பரிசோதனையின் முடிவில், குழந்தையின் உயிரியல் தந்தை ரங்கராஜ்தான் என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:"அனைவருக்கும் வணக்கம். எனது மகன் ராகவுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழு பொறுப்புடனும், அன்புடனும் செய்துவருகிறேன். இனி என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்துக்காக முழு பொறுப்புடனும், அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்."
ரங்கராஜின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. குழந்தையின் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதற்கு சிலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், கடந்த மாதங்களில் நடைபெற்ற சர்ச்சைகள் குறித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பான சட்ட மற்றும் தனிப்பட்ட அம்சங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
English Summary
I accept full responsibility for my son Madhampatti Rangaraj makes a public pledge following the DNA test