லியோ திரைப்படம் வெளியிட தடை! நீதிமன்ற உத்தரவால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை மறுநாள் (அக்டோபர் 19) உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. தமிழகத்தில் லியோ திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனவும், காலை 7 மணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் விண்ணப்பித்து அதன் மீது தமிழக அரசு நாளை பிற்பகலுக்குள் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் லியோ திரைப்படம் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோன்று ஆந்திராவிலும் அதிகாலை 5 மணிக்கு லியோ படம் திரையிட அனுமதி வழங்கியிருந்த நிலையில் வரும் அக்டோபர் 20ஆம் தேதி வரை லியோ திரைப்படம் வெளியிட தடை விதித்து ஹைதராபாத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. லியோ என்ற தலைப்பு தங்களுடையது என சிலர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் லியோ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hyderabad court orders not to release Leo movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->