ஹேமா மற்றும் லட்சுமியுடன் சேர்ந்து ஜலபுல ஜங்க் பாடலுக்கு குத்தாட்டம் போடும் அகில்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

இதில் கண்ணம்மாவாக ரோஷ்னி ஹரிப்ரியன் நடித்துவந்தார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னதாக ரோஷினி ஹரிப்ரியன் நிறைய யூடியூப் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து இருக்கிறார்.

அப்போதெல்லாம் கிடைக்காத புகழ் அவருக்கு விஜய் டிவியின் மூலமாகத்தான் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது ரோஷினி ஹரிப்ரியனுக்கு வெள்ளித்திரையில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறி சமீபத்தில் அவர் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார்.

இத்தகைய நிலையில், இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தை பிரபல மாடல் அழகி வினுஷா தேவி ரிப்லேஸ் செய்து வருகின்றார். இவர் அச்சு அசலாக ரோஷிணி ஹரிப்ரியன் போலவே இருப்பதால் உடனே கண்ணம்மாவாக அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர், 

கோர்ட் உத்தரவுப்படி, கண்ணம்மா வீட்டிற்கு வந்து பாரதி சேர்ந்து வாழ்கிறார். இத்தகைய நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் குழந்தை அம்மாவாக நடித்து வரும் லிசா ஹேமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அகிலுடன் சேர்ந்து ஆடும் ரீல்ஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hema and Akil dance for jalapula jangu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->