தினமும் மதிய உணவில் அவர் இதையே தேர்வு செய்து உண்பார்...! - விஜயின் உணவு ரகசியத்தை வெளிப்படுத்திய மமிதா பைஜு
He chooses this lunch every day Mamita Baiju reveals Vijay food secret
இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படம் ஜன நாயகன். இது விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கலாம் என்ற தகவல் பரவியதால், இப்படத்தின் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால் படம் இன்னும் திரைக்கு வராமல் தாமதமாகி வருகிறது.

இந்தப் படத்தில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பூஜா ஹெக்டே மற்றும் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசையை அனிருத் அமைத்துள்ள நிலையில், தயாரிப்பை ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என் கே இணைந்து மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள மமிதா பைஜு, விஜயுடன் பணியாற்றிய அனுபவத்தை ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
அவரது பேச்சில், “விஜய் சார் எப்போதும் நேரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் தருபவர். படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமின்றி வருவார். அமைதியான குணம் கொண்டவராக இருந்தாலும், மிகவும் அன்பான மனிதர். நாம் சாதாரணமாக பகிர்ந்த சிறிய விஷயங்களையும் கூட அவர் மறக்காமல் நினைவில் வைத்திருப்பார்.
இரண்டு மாதங்களுக்கு பிறகும் அதை நினைவுபடுத்தி பேசுவார்” எனத் தெரிவித்தார்.
மேலும், “அவருக்குப் பிடித்த உணவு பழக்கங்களையும் நான் கவனித்தேன். மதிய உணவில் எப்போதும் சால்மன் மீன் சாப்பிடுவார்.
இடைவேளைக்குப் பிறகு நான் ‘சார், சால்மன் சாப்பிட்டீர்களா?’ என்று கேட்டால், ஒவ்வொரு முறையும் புன்னகையுடன் பதில் தெரிவிப்பார்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.இந்த பகிர்வு ரசிகர்களிடையே விஜயின் எளிமை மற்றும் மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
English Summary
He chooses this lunch every day Mamita Baiju reveals Vijay food secret