மீண்டும் தந்தையான ஹர்பஜன்சிங்.! இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


ஹர்பஜன்சிங் 1998ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.  ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட், 20-20 போட்டிகளில் விளையாடிய இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 269 விக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளை எடுத்து சாதனையைப் படைத்தார் ஹர்பஜன்சிங்.

மேலும், இவர் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளில் ஹர்பஜன்சிங் விளையாடியுள்ளார்.

நடிகை கீதா பாஸ்ராவை திருமணம் செய்த பின் சினிமா மீதான ஆர்வம் அதிகரித்து நடிகர் ஆனார். டிக்கிலோனா, பிரண்ட்ஷிப் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹர்பஜன்சிங் மற்றும் கீதா பாஸ்ராவுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்தது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஹர்பஜன் சிங் தனது இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harbajan singh second baby


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->