அரசியலில் களமிறங்கும் ஜி.பி.முத்து.. எந்த கட்சி தெரியுமா.? - Seithipunal
Seithipunal


டிக் டாக் மூலம் பிரபலமானவர் ஜி பி முத்து. சமூக வலைத்தளங்களில் மிகவும் ரசிக்கப்படும் நபராக இவர் உள்ளார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், தானாகவே வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால், குறைந்த நாட்கள் மட்டுமே இருந்தாலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இதனிடைய 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் இணைந்து ஜி.பி முத்து நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் நடிகர் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் ஜி.பி முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது குடும்பமே அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கும் என்றும் ஜெயலலிதா தான் எனக்கு பிடித்த தலைவர் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோவை அதிமுகவினர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுகவின் ஜி.பி. முத்துவை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GP Muthu ADMK supporter


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->