''கோட்'' திரைப்படத்தில் இளையராஜா? வெளியான சூப்பர் அப்டேட்! - Seithipunal
Seithipunal


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கோட்'. இந்த திரைப்படத்தில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவும் நடிகர் விஜய்யும் இணைந்து ஒரு பாடலை பாட உள்ளதாகவும் இந்த பாடலை கங்கை அமரன் எழுதி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 2001 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளியான 'பிரண்ட்ஸ்' திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்த நிலையில் சுமார் 23 ஆண்டுகள் கழித்து இளையராஜா, விஜய் திரைப்படத்தில் பாட இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தையும் மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GOAT movie Update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->